Select Menu

Software

Internet

Computer Tips

Mobile

Useful Tips

Learn English

Web Design

New Carousel

Video Posts

ஐபோன் 6-ல் உள்ள பெரிய குறைபாடு! (வீடியோ இணைப்பு)

பலரும் எதிர்பார்த்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 வெளியாகி வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் மொடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டு மொடல்களும் மெலிதாக இருக்கும். ஐபோன் 6 கைப்பேசியின் டிஸ்பிளே 4.7 இன்ச் என்ற அளவிலும், 6 பிளஸ் கைப்பேசியின் டிஸ்பிளே 5.5 இன்ச் என்ற அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கைப்பேசிகள் ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே உள்ளது.
ஸ்மார்ட் போன் ஆபத்தானது! (வீடியோ இணைப்பு)

இன்றைய நவீன உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளையும் அலங்கரிக்கிறது ஸ்மார்ட் போன்.
தற்போது 80 சதவீத மக்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அவை தொலைதொடர்புக்கு மட்டுமல்லாது, பொழுது போக்குக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதில் உள்ள வாட்ஸ் அப், லைன், வீ சேட், வைபர், பேஸ்புக் மெஸ்ஜேஞ்சர் ஆகியவை நமது தலையை நிமிர்த்தவிடாமல் வைக்கிறது.
HP அறிமுகம் செய்துள்ள புதிய டேப்லட்

தரமான கணனிகளை உற்பத்தி செய்வதில் முன்னணியில் திகழும் HP நிறுவனம் HP 10 Plus எனும் புதிய Android 4.4 KitKat டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
279.99 டொலர்கள் பெறுமதியான இந்த டேப்லட் 10.1 அங்குல அளவுடையதும், 1900 X 1200 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
இது தவிர 1GHz வேகத்தில் செயல்படக்கூடிய Quad-Core Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினை உள்ளடக்கியுள்ளது.
உங்கள் இருப்பிடத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் அப்பிளிக்கேஷன்

Facebook Messenger, Gmail, Twitter மற்றும் பல சேவைகளினூடாக உங்கள் இருப்பிடத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் அப்பிளிக்கேஷன் ஒன்று இரு தினங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Glympse Express எனும் இந்த மொபைல் அப்பிளிக்கேஷன் கைப்பேசியில் சேமிக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் குறுஞ்செய்தி மூலமாகவும் இருப்பிடத்தை பகிர்ந்து கொள்ளும் வசதியினைக் கொண்டுள்ளது.
உலகின் வேகம் கூடிய இணைய உலாவி

இணையப் பாவனையில் இணைய உலாவிகளின் (Web Browser) பங்கு மிகவும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது.
தற்போது உள்ள இணைய உலாவிகளில் வேகம், இலகுவாக கையாளக்கூடிய வசதி என்பவற்றின் அடிப்படையில் கூகுள் குரோம் கொடிகட்டிப் பறக்கின்றது.
அப்பிளின் iOS 8! நிராகரிக்கும் மக்கள்

புத்தம் புது வசதிகளுடன் அப்பிள் நிறுவனம்  iOS 8 இயங்குதளத்தை அறிமுகம் செய்துள்ள போதிலும், பயனர்களை வெகுவாக கவரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பிள் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களுக்கான iOS 8 இங்குதளத்தின கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்திருந்தது.
உலகை அசத்த வந்துள்ள புத்தம் புதிய கேம் (வீடியோ இணைப்பு)

Xbox One சாதனம் மற்றும் கணனிகளில் பயன்படுத்தக்கூடிய Project Spark எனும் ஹேமினை மைக்ரோசொப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
பயனர்களை வெகுவாக கவரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்ஹேமினை இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தக்கொள்ள முடியும்.
அதிநவீன தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் HTC One M8 Eye

ஏனைய கைப்பேசி நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் HTC நிறுவனம் பல புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றது.
இந்நிலையில் HTC One M8 Eye எனும் மற்றுமொரு புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
நன்பர்கபே இலவசமா லன்டன் மாஸ்டர் கார்ட் எடுக்க ரெடியா?

நான் Already எடுத்துட்டேன்.

நன்பர்களே இன்றைக்கு சொப்பிங்க் செய்யும் போதோ டொமைன் வாங்கும் போதோ சொப்வெயார் வாங்கும் போதோ அல்லது ஆன்லைன் பிஸ்னஸ் செய்யும் போது அதிகமா தேவைப்படுரது மாஸ்டர் கார்ட் அதனால அதை எப்படி இலவசமா எடுக்குறதுன்னு நா சொல்லலாமென்டு நினைகிறேன். அதற்கான லின்க் கீழே கொடுத்துள்ளேன்.





Galaxy S5 கைப்பேசியில் Android L இயங்குதளம் (வீடியோ இணைப்பு)

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட Android இயங்குதளமானது இன்று அதிகளவான மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
பயனர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த இயங்குதளத்தின் புதிய பதிப்புக்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இதன் அடிப்படையில் Android L எனப்படும் Android Lollipop எனும் புதிய இயங்குதளத்தினை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி அறிமுகம் செய்வதற்கு கூகுள் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.
Wise Data Recovery: அழிந்த தரவுகளை மீட்க உதவும் மென்பொருள்

கணனி வன்றட்டுக்களில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளில் கோளாறுகள் ஏற்படுதல் மற்றும் அழிந்து போதல் போன்றவற்றினால் தரவு இழப்பு ஏற்படுகிறது.
இதனை தவிர்ப்பதற்கு Wise Data Recovery எனும் மென்பொருள் உதவுகின்றது.
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளின் மூலம் "Good", "Poor", "Very Poor", மற்றும் "Lost" என்ற அடிப்படையில் தரவுகளை வகைப்படுத்தி மீட்டுக்கொள்ள முடியும்.
வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான கோப்புக்களை கையாள்வதற்கு

விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்டு இயங்கும் கணனிகளில் மல்வேர்கள் அல்லது வைரஸ்கள் தாக்கிய பின்னர் சில கோப்புக்கள், கோப்புறைகளை அழிக்கவோ, நகல் செய்யவோ அல்லது இடம்மாற்றவோ முடியாமல் போகும்.
இதன்போது “file is currently in use”, “The source or destination file may be in use”, “The file is in use by another program or user”, “folder or file is open in another program”, “Cannot delete file: Access is denied”, “Make sure the disk is not full or write-protected” போன்ற செய்திகள் தோன்றுவதை அவதானித்திருப்பீர்கள்.
இவ்வாறான கோப்புக்கள், கோப்புறைகளை கையாள்வதற்கு NoVirusThanks எனும் மென்பொருள் உதவுகின்றது.
இம்மென்பொருளை பயன்படுத்தி ஸ்கான் செய்வதன் மூலம் குறித்த கோப்புக்கள், கோப்புறைகளை இனங்கண்டு அவற்றினை அழிக்கவோ, பெயரை மாற்றவோ, இடம் மாற்றவோ அல்லது நகல் செய்யவோ முடியும்.
விண்டோஸ் 9 இயங்குதளத்தின் விசேட அம்சங்கள்

மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் இயங்குதளத்தின் புதிய பதிப்பான விண்டோஸ் 9 இயங்குதளத்தினை அறிமுகம் செய்யவுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு செப்டெம்பர் 30ம் திகதி நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இவ் இயங்குதளத்தின் பயனர் இடைமுகம் உட்பட, அவற்றில் காணப்படும் சிறப்பம்சங்கள் என்பவற்றினை உள்ளடக்கிய சில வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
விண்டோஸ் 8 இயங்குதளத்தில் நீக்கப்பட்டிருந்த Start Button உடனான Menu பகுதி இப்புதிய இயங்குதளப் பதிப்பில் மீண்டும் தரப்பட்டுள்ளது.
நீங்கள் விண்டோஸ் 8 பயன்படுத்துபவரா? விண்டோஸ்-9 இலவசம்

மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட தயாராக இருக்கும் விண்டோஸ்-9 ஐ இலவசமாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
விண்டோஸ்-8 பாவனையாளர்கள், விண்டோஸ்-9 ஐ இலவசமாக பெறக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என மைக்ரோசொப்ட் இந்தோனேஷியா நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
விண்டோஸ்-8 பாவனையாளர்கள் இலகுவாக அப்டேட் செய்துகொள்ளக்கூடிய வகையில் வின்டோஸ்-9 ஒப்பரேட்டிங் சிஸ்டம் அமைந்திருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
உலகின் மிக மெல்லிய டேப்ளட் (வீடியோ இணைப்பு)


உலகின் மிக மெல்லிய டேப்ளட்டை அறிமுகப்படுத்தியுள்ளது டெல் நிறுவனம்.
டெல் வென்யூ 8 7000(Dell Venue 8 7000) என்ற பெயரில் அறிமுகமான இந்த பேப்ளட் 6 mm மட்டுமே தடிமன் கொண்டுள்ளது.
8.4 இன்ச் எட்ஜ் டூ எட்ஜ் ஓஎல்ஈடி டிஸ்ப்ளே 2560*1600 ரெசல்யூஷனை(8.4 inch, 8.4 inch, 2560 x 1600 pixel edge-to-edge OLED display)கொண்டுள்ளது.
இன்டெல் இசட் 3500 குவாட் கோர் பிராசஸர்(2.3GHz Quad Core Intel Atom Z3580 Processor) மூலம் இயங்குகிறது.