Select Menu

Software

Internet

Computer Tips

Mobile

Useful Tips

Learn English

Web Design

New Carousel

Video Posts

» » computer tips


mutur news 11:51 PM 0

Android நிஜமாகவே ஓபன்தானா

கூகுள் தனது ஆண்ட்ராய்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் ரொம்பஓபன்என்று அடிக்கடி சொல்கிறது. அது உண்மைதானா?
சமீபத்தில் கண்டறியப்பட்ட சில ஆவணங்களில், ஆண்ட்ராய்ட் ஃபோன்களைத் தயாரிப்பவர்கள் கூகுள் சர்ச் எஞ்சின், யூட்யூப் வீடியோ சேவை, கூகுள் ப்ளே அப்ளிகேஷன்கள் போன்றவற்றை அணுகுவதில் பல தடைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. ஆண்ட்ராய்டைப் பயன்படுத்தி கூகுள் தனது சேவைகள், அப்ளிகேஷன்களை முன்னிறுத்துகிறதா என்று ஐரோப்பிய Antitrust துறைகள் விசாரித்துவருகின்றன என்கிறது வால் ஸ்ட்ரீட் ஜர்னல்.

உண்மையில்ஓபன் சோர்ஸ்என்பதைப் பொதுவில் வரையறுப்பதே சிரமம். ஒவ்வொருவரும் அதை ஒவ்வொருவிதமாகப் புரிந்துகொள்வார்கள்.
ஆண்ட்ராய்ட் டெவலப்பர்களைக் கவர்ந்திழுக்கிறது, அதேசமயம் அவர்களைச் சிக்கவைக்கிறது.
ஓபன் சோர்ஸ் என்பதை நாம் எப்படி வேண்டுமானாலும் வரையறுக்கலாம்என்கிறார் கரண்ட் அனலிசிஸ் நிறுவன ஆலோசகர் அவி க்ரீன்கார்ட். ‘கூகுள் தன்னை முன்னிறுத்துகிறதா அல்லது ஆண்ட்ராய்டின் மேம்பாட்டுக்கு உழைக்கிறதா? இதுதான் பிரச்னை!’
ஃபயர்ஃபாக்ஸ், லைனக்ஸ் போன்ற ஓபன் சோர்ஸ் மென்பொருள்கள் எல்லாருக்கும் பொதுவான அமைப்புகளால் உருவாக்கப்பட்டவை. அதேபோல், ஆண்ட்ராய்ட் மென்பொருளின் Code எல்லாருக்கும் வழங்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டுக்குள் லைனக்ஸ்தான் உள்ளது. ஆனால், ஒரு முக்கியமான வித்தியாசம், அது கூகுளால் உருவாக்கப்பட்டது. புதிய வடிவங்களையும் அவர்களேதான் உருவாக்குகிறார்கள். இப்படி உருவாக்கப்படும் ஒரே ஒரு ஓபன் சோர்ஸ் சிஸ்டம் ஆண்ட்ராய்டாகதான் இருக்கும்!
நாங்கள் எங்களுடைய மென்பொருளை எல்லாருக்கும் வழங்குகிறோம், அதற்காகப் பணம் வசூலிப்பதில்லை, ஆகவே, நாங்கள் ஓபன்என்கிறது கூகுள். அதற்காக ஃபோன் தயாரிப்பாளர்களைத் தன் சேவைகளைதான் பயன்படுத்தவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது நியாயமா?
இதைத் தவிர்க்கமுடியாதுஎன்கிறார் ஆண்ட்ராய்டில் தொடக்கத்திலிருந்து பணியாற்றிவரும் டயானெ ஹாக்போர்ன். ‘இன்றைய ஆபரேட்டிங் சிஸ்டம்கள் சிறப்பாக இயங்க, அவை இணையத்தில் செயல்படும் Cloud சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஓபன் சோர்ஸ் அமைப்புகளால் அப்படிப்பட்ட Cloud சேவைகளை நடத்தமுடியாது!’
சில ஃபோன் தயாரிப்பாளர்கள் இதை ஏற்றுக்கொள்கிறார்கள். கூகுள் சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள். சிலர் மறுக்கிறார்கள். ‘இது ஓபன் அல்ல, போங்காட்டம்என்று கோபப்படுகிறார்கள். விவாதம் தொடர்கிறது!
ஆண்ட்ராய்டில் நிறைய Flexibility உண்டுஎன்கிறார் CyanogenMod Community Manager அபிஷேக் தேவ்கோட்டா, ’ஒரு டெவலப்பராக, நான் என்னுடைய அப்ளிகேஷனை எங்கும் கொண்டுசெல்லலாம், விற்கலாம்! கூகுள் இதில் எந்தவிதமான தடையையும் விதிப்பதில்லை!’
ஓபன் சோர்ஸ் மென்பொருளின் இன்னொரு முக்கியமான அடையாளம், அதனைப் பிரித்து எடுத்து வேறுவிதமாகப் பயன்படுத்த இயலவேண்டும். இதனை Forks என்பார்கள்.
ஆண்ட்ராய்டில் பல ஃபோர்க்ஸ் உண்டுஎன்கிறார் அபிஷேக் தேவ்கோட்டா. ‘உதாரணமாக, Amazon Kindle Fire, பல சீன மொபைல்கள் கூகுள் சேவைகளைப் பயன்படுத்துவதில்லை, ஆனால் ஆண்ட்ராய்ட் பயன்படுத்துகின்றன!’
ஆக, கூகுள் தன் சேவைகளை வலியுறுத்துவதில்லை. அவை அங்கே உள்ளன, பயன்படுத்திக்கொள்வதும் மறுப்பதும் டெவலப்பர்கள், ஃபோன் தயாரிப்பாளர்களின் விருப்பம்தான்.
மொத்தத்தில், கூகுள் தன்னால் முடிந்தவரை ஆண்ட்ராய்டை ஓபனாக வைக்கவே முயற்சி செய்கிறது. அதேசமயம் அது முழுவதும் ஓபன் அல்ல என்பதும் உண்மை!
இனி வரும் அப்ளிகேஷன்களைப் பொறுத்தவரை, கூகுள் மற்ற டெவலப்பர்களைவிடச் சிறந்த Dialer, Contact List போன்றவற்றை உருவாக்கப்போவது உறுதி. இதனால் அதேபோன்ற அப்ளிகேஷன்களை எழுதும் டெவலப்பர்கள் தங்களது அப்ளிகேஷன்களைப் பிரபலப்படுத்த இயலாது.
ஆக, கூகுள் தன் சேவைகளைக் குறைத்துக்கொண்டு, ஆண்ட்ராய்டை ஒரு நிஜமான ஓபன் சிஸ்டமாக்கவேண்டும் என்பதுதான் இப்போதைய கோரிக்கை


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments

Leave a Reply