Select Menu

Software

Internet

Computer Tips

Mobile

Useful Tips

Learn English

Web Design

New Carousel

Video Posts


mutur news 9:02 AM 0


இனையத்தில் நேரத்தை வீனடிப்பதைத் தவிர்ப்பதற்கு ஒரு பயனுள்ள நீட்சி


நம்மில் பெரும்பாலான இணைய பயனாளர்கள், Facebook, Orkut, Youtube போன்ற சில இணைய தளங்களுக்கு அடிமையாகி விடுகிறோம். ஒரு சில சமயங்களில் ஒழுங்காக ஆணி பிடுங்க வேண்டிய நேரங்களையும், பிற அத்தியாவசிய பணி நேரங்களையும், இந்த தளங்களில் உலாவுவதன் மூலமாக வீணடித்து விடுகிறோம். (டிவி சீரியல்கள் போல).  
இதற்கு மேல் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் மட்டும்தான் இந்த தளங்களுக்கு செலவழிக்க வேண்டும் என்றோ அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தை மட்டுமே ஒதுக்க வேண்டும் என்றோ பல சமயங்களில் சபதமெடுத்து, மறுநாளே மறந்து போய் பழையபடி நமது நேரத்தை வீணடித்து கொண்டிருப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது


இந்த பிரச்சனைக்கு Google Chrome உலாவிக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைவது Chrome Nanny எனும் ஒரு பயனுள்ள நீட்சி! (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது


  Install பொத்தானை சொடுக்கி இந்த நீட்சியை உங்கள் க்ரோம் உலாவியில் பதிந்து கொண்டபிறகு, நிறுவப்பட்டதற்கான அறிவிப்பை திரையில் அதற்குரிய ஐகானுடன் காணலாம்


இந்த ஐகானை வலது க்ளிக் செய்து, Options வசதியை க்ளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும் திரையில், Blocked URLs டேபில், Block set Name என்பதற்கு நேராக உள்ள பெட்டியில், தேவையான பெயரை கொடுங்கள். அடுத்துள்ள URLs பெட்டியில், எந்தெந்த தளங்களை ப்ளாக் செய்ய வேண்டுமோ அவற்றின் வலைத்தள முகவரிகளை, ஒன்றன்கீழ் ஒன்றாக டைப் செய்யுங்கள். (உதாரணமாக www.facebook.com)    

அடுத்துள்ள Block Time பகுதிக்கு நேராக உள்ள பெட்டியில், எந்தெந்த நேரங்கள் ப்ளாக் செய்ய வேண்டும் என்பதை கொடுங்கள். (உதாரணமாக 1000-1300, 1430-1730) அடுத்து Apply on Days பகுதியில் எந்தெந்த நாட்கள் ப்ளாக் செய்ய வேண்டும் என்பதையும் தேர்வு செய்து கொண்டு, Save URL பொத்தானை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்

அவ்வளவுதான். இனி அந்த ப்ளாக் செய்யப்பட நேரங்களில் குறிப்பிட்ட வலைத்தளங்களுக்கு செல்ல முயற்சிக்கையில், கீழ் காணும் செய்தி மட்டுமே திரையில் தோன்றும்


  ஒருவேளை குறிப்பிட்ட நேரத்தில் என்றில்லாமல், ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் மட்டுமே அந்த குறிப்பிட்ட தளங்களில் பணிபுரிய அனுமதி வேண்டும் (அது எந்த நேரமானாலும் பரவாயில்லை) எனில், இந்த பகுதியில் உள்ள Blocked Time க்கு நேராக 0000-0000 என கொடுத்துMax Time In a Dayஎன்பதற்கு நேராக 60 என கொடுத்து Save URL பொத்தானை சொடுக்கினால் போதுமானது

இது போன்று ப்ளாக் செய்யப்பட்ட தளங்களுக்கு செல்ல முயலும் பொழுது, திரையில் தோன்றும் செய்திக்கு பதிலாக, அந்த குறிப்பிட்ட டேபை மூட வேண்டும் என்றாலோ, அல்லது மற்றொரு தளத்திற்கு Redirect ஆக வேண்டும் என்றாலோ, இந்த நீட்சியின் Options பகுதிக்கு சென்று, General Options டேபிற்கு சென்று நமது தேவைக்கு மாற்றி அமைத்துக் கொள்ளலாம்


    இது தவிர மேலும் பல வசதிகளை இந்த நீட்சி உள்ளடக்கியுள்ளது. ஆனாலும் இதே நீட்சியில் ப்ளாக் செய்யப்பட்ட தளங்களை நீக்கிவிட்டு, ஆணி பிடுங்குகிற நேரத்தை வீணடிப்பேன் என்று யோசிப்பவர்களுக்கு வேறு வழியில்லை

இதே போன்ற வசதிகளை உள்ளடக்கிய நெருப்பு நரி உலாவிக்கான நீட்சிLeechBlock !




«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments

Leave a Reply