Select Menu

Software

Internet

Computer Tips

Mobile

Useful Tips

Learn English

Web Design

New Carousel

Video Posts

» » facebook


mutur news 7:44 PM 0

பிரவுசர்களிடம் சிறிது ஜாக்கிரதையாக இருங்கள்..!


இன்றைக்கு குறிப்பிட்ட சில இன்டர்நெட் யூஸர்ஸ் பயன்படுத்தும் பிரவுசர்கள், மிகப் பழையதாகவும், பழைய பதிப்புகளாகவும் இருப்பதாகக் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இது மொத்தத்தில் 26% பேர் பயன்படுத்தும் பிரவுசர்கள், மிகப் பழையதாக உள்ளன. ஏறத்தாழ பத்தில் ஒருவர் பழைய பதிப்புகளையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அவர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் பாதுகாப்பு பிரச்னைக்குரியதாகின்றன.
இவர்களில் 18.7% பேர், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பதிப்பிற்கு முந்தைய பதிப்பினையே பயன்படுத்துகின்றனர்.
8.5% பேர், மிகப் பழைய பிரவுசர்கள் மூலம் இணையத்தைக் காண்கின்றனர். 77% பயனாளர்கள், சோதனைப் பதிப்பு மற்றும் புதிய பதிப்பினைப் பயன்படுத்துகின்றனர்.



ஒரு பிரவுசரின் புதிய முழுமையான பதிப்பு வெளியான பின்னர், ஒரு மாதம் கழித்தே, அதனைப் பயனாளர்கள் பயன்படுத்தத் தொடங்குகின்றனர்.
ஆனால், சைபர் உலகத்தினை தங்கள் மால்வேர் புரோகிராம்களால் ஆட்டிப் படைக்கும் ஹேக்கர்கள், புதிய பதிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, எந்த இடத்தின் தவறைத் தங்கள் நோக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெளிவாகத் தெரிந்து கொள்கின்றனர். அவற்றைப் பயன்படுத்தி தங்கள் நாச வேலைக்கு அடித்தளம் அமைக்கின்றனர்.
நிறுவனங்களில், அதன் ஊழியர்கள், புதிய பிரவுசருக்கு மாறுவதற்கு நிர்வாகத்தினர் அனுமதி அளிப்பதில்லை.
சில காலத்திற்குப் பின்னரே, மிகத் தயக்கத்துடன் அனுமதிக்கின்றனர். இது முற்றிலும் தவறான போக்காகும்.
இது போல பழைய பிரவுசர்களை நிறுவனங்கள் பயன்படுத்துவது, நிறுவனத்தின் கம்ப்யூட்டருக்கும், அவற்றில் உள்ள விலை மதிப்பில்லா டேட்டா பைல்களுக்கும் ஆபத்தினை விளைவிக்கும்.
நண்பரே நாம் புதிதாக பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கி உள்ளோம் அதை லைக் பண்ணி பேஸ்புக்லயும் இந்த மாதிரி செய்திகளை பெற்றிடுங்கள் இதோ லைக் பண்ண இங்கே கிளிக் செய்யுங்கள் இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள்


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments

Leave a Reply